கோவில் சுவரில் துளையிட்டு நகை கொள்ளை


கோவில் சுவரில் துளையிட்டு நகை கொள்ளை
x

கோவில் சுவரில் துளையிட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பிடாரி பொன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் பராமரித்து வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து கோவிலின் கருவறை உள்ளே சென்றபோது சுவரில் பெரிய துளையும் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமலிங்கம் ஊர் பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கோவிலின் உள்ளே பீரோவில் இருந்த பணம், நகைகள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story