கும்மிடிப்பூண்டி அருகே கடையில் நூதன முறையில் நகை திருட்டு - பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு


கும்மிடிப்பூண்டி அருகே கடையில் நூதன முறையில் நகை திருட்டு - பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு
x

கும்மிடிப்பூண்டி அருகே நகைகடையில் நூதன முறையில் நகையை திருடிச்சென்ற பெண்ணை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜாரில் நகை கடை நடத்தி வருபவர் கல்லூர் ராம் (வயது 55). நேற்று மோட்டார் சைக்கிளில் மேற்கண்ட நகை கடைக்கு சுமார் 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார்.

3 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலியை வாங்க வந்ததாக கூறி, கடையில் இருந்த ஒரு சில மாடல்களிலான தங்க சங்கிலிகளை அவர் எடுத்து பார்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நகை வேண்டாம் என தெரிவித்த அந்த பெண், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக புறப்பட்டு சென்று விட்டார்.

நகை வாங்க வந்த பெண் கடையை விட்டு வெளியே சென்ற பிறகு நகைகள் சரியாக இருக்கிறதா என பரிசோதித்தபோது கடையில் இருந்து 3 பவுன் நகை மாயமானது தெரியவந்தது.

இந்த நூதன திருட்டு சம்பவம் குறித்து கல்லூா் ராம் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை கடையில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story