16½ பவுன் நகை கொள்ளை


16½ பவுன் நகை கொள்ளை
x

ஆரல்வாய்மொழியில் பேரூராட்சி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் பேரூராட்சி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பேரூராட்சி ஊழியர்

ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 48). இவர் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜிமலர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், மனோகரன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் விஜி மலர், குழந்தைகள், மனோகரனின் பெற்றோர், சகோதரி அருள்ஜோதி, அவருடைய இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் வீட்டில் படுத்து தூங்கினார்கள்.

இந்த நிலையில் நள்ளிரவில் மனோகரனின் மகள் சுரேகா ஏதோ சத்தம் கேட்டு திடீரென கண்விழித்து பார்த்தாள். அப்போது வீட்டில் இருந்து யாரோ வெளியே செல்வது போல் இருந்தது. உடனே அம்மாவை எழுப்பினார். அதைத்தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து கொண்டனர். அதற்குள் வீட்டில் இருந்து சிலர் ஓடும் சத்தம் கேட்டது.

16½ பவுன் நகை கொள்ளை

இதனால் பதறிப்போன விஜிமலர், உடனே பீரோ இ்ருந்த அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 2 நெக்லஸ், 2 தங்க சங்கிலி, 5 மோதிரங்கள், கம்மல்கள் என மொத்தம் 16½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.

வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

தனிப்படை

இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மோப்பநாய் ஏஞ்சலும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு அப்பகுதியில் உள்ள சில தெருக்கள் வழியாக ஓடி படுத்துக்கொண்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வந்து, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பேரூராட்சி ஊழியர் வீட்டில் கொள்ளை நடந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.16½ பவுன் நகை கொள்ளை16½ பவுன் நகை கொள்ளை16½ பவுன் நகை கொள்ளை


Next Story