ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
x
தினத்தந்தி 22 Jun 2023 7:58 PM GMT (Updated: 23 Jun 2023 4:43 AM GMT)

அருப்புக்கோட்டை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டியை சேர்ந்தவர் கோபி சின்னசாமி. இவரது மனைவி சுகந்தி (வயது 39). இவர் அங்குள்ள வங்கியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தான் வேலை செய்யும் வங்கியில் அடமானம் வைத்திருந்த நகைகளை திருப்பி பையில் வைத்துக்கொண்டு தனது மகளின் திருமணத்திற்கு உறவினர்களுக்கு பத்திரிக்கை வைப்பதற்காக அருப்புக்கோட்டை வந்துள்ளார். பின்னர் மீண்டும் ஊர் திரும்புவதற்காக அருப்புக்கோட்டை அகமுடையார் பஸ் நிறுத்தத்தில் பையை சரிபார்த்த போது அதில் நகைகள் இருந்துள்ளது. பின்னர் அங்கிருந்து பஸ்சில் ஏறி ஊர் திரும்பி வீட்டில் வந்து பையை பார்த்த போது நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சுகந்தி அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணிடம் நகையை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story