நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் கொள்ளை - கைதானவர்களை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி


நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் கொள்ளை - கைதானவர்களை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
x

ஐஸ்வர்யா வீட்டு பணியாளர் ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் லாக்கர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை போலீசில் ஐஸ்வர்யா புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்த வேலைக்கார பெண் ஈஸ்வரி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகிய இருவரை அதிரடியாக கைது செய்தனர். ஈஸ்வரியும், வெங்கடேசனும் நீதிமன்ற காவலோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஈஸ்வரியின் கணவர் அங்கமுத்துவும் தொடர்ந்து விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளார். இதனிடையே வேலைக்கார பெண்ணான ஈஸ்வரி, நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் வீடுகளிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டு பணியாளர் ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.


Next Story