வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் நீதிபதி திடீர் ஆய்வு


வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் நீதிபதி திடீர் ஆய்வு
x

வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் கரூர் குற்றவியல் நீதிபதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர்

கரூர் குற்றவியல் நீதிமன்ற (ஜே.எம்.-2) நீதிபதி சுஜாதா வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு திடீரென வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். போலீஸ் நிலையத்தில் உள்ள குற்ற வழக்குகள், விபத்து வழக்குகள், திருட்டு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் போலீஸ் நிலையத்தில் உள்ள கைதிகள் அறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெண் கைதிகளை இரவு நேரத்தில் இங்கு அடைத்து வைக்கக்கூடாது என்று தெரிவித்தார். அதன்பின்னர் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் கோப்புகளை நீதிமன்றத்திற்கு உடனுக்குடன் நிலுவை இல்லாமல் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை கனிவுடன் பேசி அமர வைக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். இந்த ஆய்வின் போது இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ரமேஷ், நந்தகோபால், ரெங்கராஜ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story