இன்று மாலை மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்..!


இன்று மாலை மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்..!
x

சித்திரை திருவிழாவையொட்டி இன்று மாலை மதுரைக்கு கள்ளழகர் புறப்பட இருக்கிறார்.

மதுரை,

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருந்திருவிழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இதில் கள்ளழகர் பெருமாளுக்கு மங்கள இசை முழங்க, வேதமந்திரங்களுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது,

அதன் பின்னர் பல்லக்கில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடாகி ேகாவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்தார். சகல பரிவாரங்களுடன் சென்று திருக்கல்யாண மண்டபத்திற்கு சென்று எழுந்தருளினார். அப்போது விசேஷ பூஜைகள், சர விளக்குகள், தீபாராதனைகள் நடந்தன.

இந்த நிலையில், சித்திரை திருவிழாவையொட்டி இன்று (புதன்கிழமை) மாலையில் மதுரைக்கு தங்க பல்லக்கில் கள்ளழகர் புறப்பட இருக்கிறார். நாளை (வியாழக்கிழமை) மூன்று மாவடியில் எதிர் சேவையும் 5-ந் தேதி கள்ளழகர் அதிகாலையில் 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளலும் நடக்க உள்ளது. 6-ந் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

1 More update

Next Story