காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை-தென்கலை பிரிவினரிடையே மோதலால் பரபரப்பு


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை-தென்கலை பிரிவினரிடையே மோதலால் பரபரப்பு
x

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை - தென்கலை பிரிவினரிடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த மாதம் 2-ந்தேதி கருடசேவை உற்சவமும், 6-ந்தேதி தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது. கடந்த 2-ந்தேதி மாலை அனுமந்த வாகன வீதியுலாவின்போது, வடகலை, தென்கலை பிரிவினரிடையே வேத பாராயணம் பாடிய போது சிறு சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் நித்தியபடி பூஜைகள் நடைபெற்றது

சாமிக்கு நைவேத்திய நித்தியபடி செய்த பிரசாதம் வழங்கும்போது, வடகலை பிரிவினரே வேத பிராயணம் பாடியபடி வந்த நிலையில் எதற்காக தென்கலை பிரிவினருக்கு வழங்கப்படுகிறது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பகதர்கள் முகம் சுளித்தபடி சாமி தரிசனம் செய்யாமல் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புண்ணியகோடி வாகன உற்சவம் நடைபெற்றது.

இந்த உற்சவத்திற்கு பிறகு பாசுரங்களை பாடிவரும் தென்கலை பிரிவினர், நம்மாழ்வாருக்கு பெருமாளின் சடாரி வைத்து மரியாதை செய்வது வழக்கம். ஆனால் அவற்றை செய்யவிடாமல் பெருமாளின் சடாரியை வடகலை பிரிவினர் தள்ளி விட்டதாக கூறி தென்கலை பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மணியக்காரர் உதவியுடன் தென்கலை பிரிவினர் அவமதிக்கப்பட்டு வருவதாகவும், நேற்று முன்தினம் கூட சாமியின் சடாரியை தள்ளிவிட்டு பிரச்சினையில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தென்கலை பிரிவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வடகலை பிரிவினரோ, சாமிக்கு எந்தவித பணிகளையும் செய்யாமல் பிரசாதங்கள் மற்றும் உரிமைகளை மட்டும் தென்கலை பிரிவினர் கேட்டு வருகின்றனரர் என்று குற்றம் சாட்டினர்.


Next Story