"கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பிப்ரவரி மாதம் தொடங்கப்படும்" - அமைச்சர் முத்துசாமி தகவல்


கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பிப்ரவரி மாதம் தொடங்கப்படும் - அமைச்சர் முத்துசாமி தகவல்
x

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ள பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள், கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.

தொடர்ந்து கட்டுமான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பேருந்து நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், புதிய பேருந்து நிலையத்திற்கான அடிப்படை கட்டுமான பணிகள் முடிந்துள்ளதாகவும், அதன் பயன்பாட்டு வசதிகள், பூச்சு வேலை, மின்சார இணைப்பு உள்ளிட்ட பணிகள் ஓரிரு மாதங்களில் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story