சிறப்பாக பணியாற்றிய 51 போலீசாருக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 51 போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 51 போலீசார், கோர்ட்டில் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த அரசு வக்கீல் முருகபெருமாள் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story