மின்னாம்பள்ளி வன்னியம்மன் கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்
மின்னாம்பள்ளி வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)நடக்கிறது.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, மின்னாம்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற குளக்கரை வன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், கருப்பண்ணசுவாமி, மதுரை வீரன் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலை 5.30 மணியளவில் பூர்ணாஹூதி, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 8 மணியளவில் வாங்கல் காவிரி ஆற்றில் இருந்து கோவிலுக்கு மேளதாளங்களுடன் புனித நீர் எடுத்து வரப்படுகிறது. மாலை 4.30 மணியளவில் மின்னாம்பள்ளியில் இருந்து கோவிலுக்கு முளைப்பாரி கொண்டு வரும் விழா நடக்கிறது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. இரவு 9 மணியளவில் விஜய் டி.வி. நட்சத்திரங்களுடன் இன்னிசை நடன நிகழ்ச்சி நடக்கிறது. நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9.40 மணியளவில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 8 மணியளவில் சின்னகரசப்பாளையம் பழனிவேலு குழுவின் கொங்கு ஒயிலாட்டம், ஈசன் வள்ளி கும்மி, பெருஞ்சலங்கை, உருமி ஆகிய ஆட்டங்கள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.