கும்பகோணத்தில் பா.ஜ.க. நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு


கும்பகோணத்தில் பா.ஜ.க. நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 14 Oct 2023 4:30 PM IST (Updated: 14 Oct 2023 4:42 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் பா.ஜ.க. நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பா.ஜ.க.வின் சார்பில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காக கும்பகோணத்தில் வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்குகிறார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் தமிழகத்துக்கும், கேரளா, கர்நாடகா அண்டை மாநிலங்களுக்குமிடையே தீர்க்கப்படாத நதி நீர் பங்கீடு, அணை கட்டும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முயற்சிக்காமல் வீண் நாடகமாடி நீண்ட காலமாக தமிழக மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க அரசை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அறிவித்துள்ளார்.


Next Story