ரூ.2½ கோடி மதிப்பிலான நிலம் மீட்பு


ரூ.2½ கோடி மதிப்பிலான  நிலம் மீட்பு
x

திருவாரூர் அருகே ரூ.2½ கோடி மதிப்பிலான ேகாவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் அருகே ரூ.2½ கோடி மதிப்பிலான ேகாவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

நிலம் அளவீடு

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருவாரூர் அருகே கீழகாவாதுகுடி கிராமத்தில் தியாகராஜர் கோவில் அபிஷேக கட்டளைக்கு சொந்தமான நஞ்சை நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் உத்தரவுப்படி உதவி ஆணையர் ராணி, தாசில்தார் லட்சுமிபிரபா ஆகியோர் கீழகாவாதுகுடி பகுதியில் நிலத்தை அளவீடு செய்தனர்.

ரூ.2½ கோடி

இதில் கோவிலுக்கு சொந்தமான 60 சென்ட் நஞ்சை நிலம் மற்றும் 600 சதுர அடி கட்டிடம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த நிலம் மீட்கப்பட்டு, அந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்த நஞ்சை நிலம் மற்றும் கட்டிடத்தின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம் என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். இதைப்போல கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

1 More update

Next Story