நிலத்தை கிரையம் செய்யாமல் 3 ஆண்டுகளாக ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த நிலத்தரகர் கைது


நிலத்தை கிரையம் செய்யாமல் 3 ஆண்டுகளாக ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த நிலத்தரகர் கைது
x

வண்டலூர் அருகே 3 ஆண்டுகளாக நிலத்தை கிரையம் செய்யாமல் ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த நிலத்தரகர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு

நிலக்கிரையம்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கொளப்பாக்கம் அண்ணா நகர், அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் அமுதா (வயது 38). இவர் கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்த நிலத்தரகர் டி‌.வி.முனீர் (56) என்பவரிடம் தைலாவரத்தில் 889 சதுர அடி நிலம் வாங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ரூ.15 லட்சம் தந்துள்ளார். ஆனால் நிலத்தரகர் முனீர், அமுதாவிற்கு நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளார்.

ரூ.15 லட்சம் மோசடி

இதனால் அமுதா பணத்தை திருப்பி கேட்டபோது, முனீர் பணத்தை தர மறுத்து அமுதாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நிலத்தரகர் முனீர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமுதா கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.15 லட்சத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை கிரையம் செய்து தராமல் ஏமாற்றி பணம் கொடுத்த அமுதாவை மிரட்டிய நிலத்தரகர் முனீரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story