முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, பணிகளைத் தொடரட்டும் - சீமான்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, பணிகளைத் தொடரட்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். எனவே அந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் பெற்று மீண்டு வந்து பணிகளைத் தொடர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, பணிகளைத் தொடர எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.