"மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 Dec 2023 9:52 AM GMT (Updated: 11 Dec 2023 10:23 AM GMT)

வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

பாரதியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம். வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை!" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story