கோர்ட்டு வரலாற்றில் முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நேரலையாக ஒளிபரப்பு - மக்கள் நீதி மய்யம் வரவேற்பு


கோர்ட்டு வரலாற்றில் முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நேரலையாக ஒளிபரப்பு - மக்கள் நீதி மய்யம் வரவேற்பு
x

கோர்ட்டு வரலாற்றில் முதல்முறையாக, சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்படுவதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்படுவதை மக்கள் நீதி மய்யம் பெரிதும் வரவேற்கிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெறுவதையடுத்து, அவரது தலைமையிலான அமர்வில் நடைபெறும் விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

நீதித்துறை வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

2018-ம் ஆண்டிலேயே இதற்கு கொள்கை அளவில் அனுமதி வழங்கப்பட்டாலும், தற்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர வேண்டும். படிப்படியாக உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களிலும் நேரடி ஒளிபரப்பை அமல்படுத்த வேண்டும்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவை மட்டுமின்றி, நீதிமன்ற நடைமுறைகளையும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நிகழ்வுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை இந்த நடைமுறை உறுதிப்படுத்தும். நல்ல ஜனநாயகத்துக்கும் இது அடையாளமாக இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story