கறவை மாடு பராமரிப்பு கடன் வழங்கும் நிகழ்ச்சி
கறவை மாடு பராமரிப்பு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிவகங்கை
திருப்புவனம்,
திருப்புவனத்தில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தி செய்யும் வன்னிகோட்டை, வில்லியாரேந்தல் கிராமங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு, திருப்புவனம் உழவர் பணி கூட்டுறவு சங்கம் மூலம் முதற்கட்டமாக பால் கறவை மாடுகளின் பராமரிப்பு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். விழாவில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் கலந்துகொண்டு கறவை மாடுகளின் பராமரிப்பு கடனாக ரூ.14,000 வீதம் 31 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் வழங்கினார்.
விழாவில் பால் உற்பத்தியாளர் சங்க மேலாளர் கிருஷ்ணன், திருப்புவனம் உழவர் பணி கூட்டுறவு சங்க செயலாளர் செல்லப்பாண்டியன், யூனியன் துணை தலைவர் மூர்த்தி மற்றும் சங்க நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story