மேல்மருவத்தூர் அருகே லாரி-பஸ் மோதல்; 10 பேர் படுகாயம்


மேல்மருவத்தூர் அருகே லாரி-பஸ் மோதல்; 10 பேர் படுகாயம்
x

மேல்மருவத்தூர் அருகே லாரி-பஸ் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு

10 பேர் படுகாயம்

திருச்சியில் இருந்து 40 பயணிகளுடன் சென்னை நோக்கி ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மேல்மருவத்தூர் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் சென்ற போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரியலூரில் இருந்து சிமெண்டு மூட்டை ஏற்றிச்சென்ற லாரியின் பின்னால் மோதியது.

இதில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரி மற்றும் பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

இதனால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story