சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய லாரி டிரைவர் கைது


சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய லாரி டிரைவர் கைது
x

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, அந்த லாரி டிரைவரிடம் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கூறினார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த டிரைவர், சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் ரவியின் கன்னத்தில் பளாரென அறைந்தார். உடன் இருந்த போலீசார் லாரி டிரைவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர், சுங்குவார்சத்திரம் அடுத்த திருமங்களம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வம் (வயது 24) என்பது தெரியவந்தது. இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.


Next Story