பள்ளி மாணவிக்கு லவ் டார்ச்சர்.. நோ சொன்னதால் அரிவாள் வெட்டு... தூத்துக்குடியில் பயங்கரம்


பள்ளி மாணவிக்கு லவ் டார்ச்சர்.. நோ சொன்னதால் அரிவாள் வெட்டு... தூத்துக்குடியில் பயங்கரம்
x

தூத்துக்குடியில் பள்ளி மாணவி அரிவாளால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரகுடி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.

அந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் ஒரு தலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த மாணவர், மானவியிடம் பேச முயன்றுள்ளார்.

அப்போது அந்த மாணவி அவரிடம் பேச்சு கொடுக்காமல் விலகி சென்றதால் அத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு மாணவியின் தலை, கை ஆகிய பகுதிகளில் கடுமையாக தாக்கினார்.

இதில் பலத்த காயம் அடைந்த இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து தப்பி செல்ல முயன்ற அந்த இளைஞரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை பிடித்து தட்டப்பாரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பரபரப்பான இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story