மதுரை: பஸ்சில் படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவன் தவறி விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு


மதுரை:  பஸ்சில் படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவன் தவறி விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
x

மதுரையில் பஸ்சின் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை,

மதுரை மாவட்டம், ஆனையூரிலிருந்து அனுப்பானடி நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் இன்று கூட்டமாக இருந்துள்ளது. இந்நிலையில் இன்று பள்ளி செல்வதற்காக மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்துள்ளனர். இந்த பஸ்சில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரபாகரன் என்பவரும் பயணம் செய்துள்ளார்.

இவர் அந்த பஸ்சில் முன் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்துள்ளார். அப்போது பஸ் பெத்தானிபுரம் அருகே வந்த போது வளைவில் திரும்ப முயன்றுள்ளது. அப்போது பஸ்சில் தொங்கிய படி பயணம் செய்த மாணவன் பிரபாகரன் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், பஸ்சின் பின்புற சக்கரங்கள் மாணவனின் தலையில் ஏறி இறங்கியது.

இந்த சம்பவத்தில் பள்ளி மாணவன் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த திடீர் நகர் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story