பிரதமரின் பிறந்தநாளில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் - மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி மறுப்பு


பிரதமரின் பிறந்தநாளில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் - மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி மறுப்பு
x

பிறந்தநாள் நிகழ்ச்சி என்றால் நலத்திட்ட உதவிகள் வழங்கலாம், இனிப்பு வழங்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை,

திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் கிராமத்தில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடத்த மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், இது தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி மகாதேவன், நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதால் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயங்களுக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பிறந்தநாள் நிகழ்ச்சி என்றால் நலத்திட்ட உதவிகள் வழங்கலாம், இனிப்பு வழங்கலாம் என்று கூறியதுடன் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயத்திற்கு அனுமதி மறுத்துவிட்டனர். மேலும் இந்த மனு மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story