காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்றபோது மாயம்: நடுக்கடலில் படகில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு


காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்றபோது மாயம்: நடுக்கடலில் படகில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
x

காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்றபோது நடுக்கடலில் படகு கவிந்து தத்தளித்த 4 மீனவர்களை மீன்பிடித் துறைமுகம் போலீசார் மீட்டனர்.

சென்னை

தண்டையார்பேட்டை திடீர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் வீட்டில் தங்கியிருந்த அவரது நண்பர்களான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் (வயது 52), சம்பந்தம் (58), கமலநாதன் (50), சக்தி (45) ஆகிய 4 பேருடன் தர்மலிங்கத்துக்கு சொந்தமான பைபர் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்த நிலையில் அவர்கள் மாலை வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் மீனவர்களை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனாலும் மாயமான மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாயமான மீனவர்களை தேடி வந்தநிலையில், நடுக்கடலில் கவிழ்ந்த பைபர் படகில் ஏறி அமர்ந்து தத்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களையும் நேற்று மதியம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் அவர்கள் சென்ற பைபர் படகையும் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். கரைக்கு வந்த 4 மீனவர்களும் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story