வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு


வரத்து குறைவால்  மக்காச்சோளம் விலை உயர்வு
x

வரத்து குறைவால் நிலக்கடலை- மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்

நிலக்கடலை

கரூர் மாவட்டம் குளத்துப்பாளையம், குந்தாணிபாளையம், வடுகபட்டி, வேட்டமங்கலம், ஓலப்பாளையம் பல்வேறு பகுதிகளில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் நிலக்கடலை பயிர் செய்துள்ளனர். நிலக்கடலை விளைந்ததும் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், நொய்யல் அருகே சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 153.38 குவிண்டால் எடை கொண்ட 475 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலை காய் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.70.16-க்கும், குறைந்த விலையாக ரூ.60.00-க்கும், சராசரி விலையாக ரூ.65.20-க்கும் என ரூ.9 லட்சத்து 89 ஆயிரத்து 483-க்கு விற்பனை ஆனது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மக்காச்சோளம்

நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் விளைந்ததும் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் வேளாண்ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மக்காச்சோள கதிர்களை சந்தை பகுதிகளுக்கும், உள்ளூர் பகுதிகளுக்கும் வியாபாரிகள் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.18-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ரூ.20 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story