மகரவிளக்கு பூஜை: செகந்திராபாத்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


மகரவிளக்கு பூஜை: செகந்திராபாத்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை,

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது செகந்திராபாத்தில் இருந்து சேலம் வழியாக கொல்லத்திற்கு சபரிமலை சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி செகந்திராபாத் - கொல்லம் சபரிமலை சிறப்பு ரெயில் (07121) வரும் 14-ந் தேதி செகந்திராபாத்தில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 11.38 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 11.40 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுன், கோட்டையம் வழியாக இரவு 11.55 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

இதேபோல் கொல்லம்- செகந்திராபாத் சபரிமலை சிறப்பு ரெயில் (07122) கொல்லத்தில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு கோட்டையம், எர்ணாகுளம் டவுன், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மதியம் 2.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 2.40 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை காட்பாடி வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story