தாய், தம்பியை தாக்கியவர் கைது

தாய், தம்பியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 50). இவர் தனக்கு சொந்தமான விளை நிலத்தை தனது மகன்கள் ஏழுமலை (30), முனியன் (28) ஆகியோருக்கு சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் மொத்த நிலத்திலும் ஏழுமலை விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீரம்மாள், ஏழுமலையிடம் உன்னுடைய பங்கில் மட்டும் விவசாயம் செய்ய வேண்டும், முனியனின் பங்கை அவாிடம் கொடுத்து விடு, என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி கிரிஜா ஆகியோர் வீரம்மாளை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தடுத்த முனியனையும் அவர்கள் தாக்கியதாக தொிகிறது. இதுகுறித்து வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, கிரிஜா ஆகிய 2 பேர் மீது ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.






