பள்ளிப்பட்டு அருகே சுடுகாட்டில் ஆண் பிணம் வீச்சு; கொலையா? போலீஸ் விசாரணை


பள்ளிப்பட்டு அருகே சுடுகாட்டில் ஆண் பிணம் வீச்சு; கொலையா? போலீஸ் விசாரணை
x

பள்ளிப்பட்டு அருகே சுடுகாட்டில் கட்டி வீசப்பட்ட ஆண் பிணத்தை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்

சுடுகாட்டில் அழுகிய நிலையில் உடல்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கோனாட்டம் பேட்டை கிராமத்தில் பள்ளிப்பட்டு வட்ட அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இதன் அருகே அந்த கிராமத்தின் சுடுகாடு பிரதான சாலையையொட்டி உள்ளது. இந்த நிலையில் சுடுகாட்டில் நேற்று காலை கறுப்பு பிளாஸ்டிக் பாக்கெட்டினால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் உடல் ஒன்று வீசப்பட்டு கிடந்ததை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து பள்ளிப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் அந்த உடல் சுமார் 50 வயதுடைய ஆண் பிணம் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிணமாக மீட்கப்பட்டவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டவரை யாராவது கறுப்பு கவரில் சுற்றி வீசி விட்டு சென்றார்களா? என்பது பற்றி பள்ளிப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story