பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணி மண்டபம் கட்டப்படும்: வெளியான தகவல்


பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணி மண்டபம் கட்டப்படும்: வெளியான தகவல்
x

மணிமண்டபம் கட்டுவது குறித்து அரசிடம் மனு கொடுத்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையின் போது ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதி அவ்வாறு கட்டுவதாக இருந்தால் அது குறித்து அரசிடம் மனு கொடுத்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வக்கீல் ஆனந்த் என்பவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் அருகே சுமார் 7 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது. அங்கு பல அடுக்குகளை கொண்ட அடுக்குமாடி வீடுகளே கட்டலாம். எனவே, அங்கு ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்டப்படும். அவர் சமுதாயத்திற்காக செய்த அரும் பணிகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையாக அவை இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்" என்று வக்கீல் ஆனந்த் தெரிவித்தார்.


1 More update

Next Story