மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. லீமோரோஸ் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. பொல்லார்மின் வாழ்த்துரை வழங்கி ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வரும் கலவரத்தை தடுக்க இதுவரை மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்காமல் மவுனமாக இருப்பதாகவும், இதை கண்டித்தும், இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, அந்தோணி, விஜயமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் நன்றி கூறினார்.

--


Next Story