கோவையில் கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்


கோவையில் கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
x

கோவை விமான நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். இன்றைய தினம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்குச் சென்றுவிட்டு, சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கார்ல் மார்க்ஸ் குறித்து, அவரது கருத்துக்கள் குறித்தும் கவர்னர் ஆர்.என்.ரவி அவதூறாக பேசியதாகக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திடீரென கோவை விமான நிலையம் அருகே திரண்டு, கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் அங்கிருந்தவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கோவை விமான நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.Next Story