மின் கட்டண உயர்வு தொடர்பாக சென்னையில் இன்று கருத்து கேட்புக் கூட்டம்


மின் கட்டண உயர்வு தொடர்பாக சென்னையில் இன்று கருத்து கேட்புக் கூட்டம்
x

மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் சென்னையில் இன்று மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 16-ந்தேதி கோவையிலும், 18-ந்தேதி மதுரையிலும் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று சென்னையில் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு கருத்து கேட்புக் கூட்டம் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story