முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்ற மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்ற மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்
x

மேல்மருவத்தூர் ஊராட்சி முன்மாதிரி ஊராட்சியாக செயல்பட்டுள்ளது என தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு விருது அறிவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் மேல்மருவத்தூர் ஊராட்சி முன்மாதிரி ஊராட்சியாக செயல்பட்டுள்ளது என தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு விருது அறிவிக்கப்பட்டது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாரிடம் வழங்கினார். அப்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வக்கீல் அகத்தியன், மாவட்ட கலெக்டர் ஊரக வளர்ச்சி முகமை அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story