மெட்ரோ ரெயில் பயணிகள் 'வாட்ஸ்-அப்' மூலம் டிக்கெட் பெறும் வசதி - - - - செல்போன் எண் அறிவிப்பு


மெட்ரோ ரெயில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி - - -     - செல்போன் எண் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 July 2023 5:44 AM GMT (Updated: 4 July 2023 5:45 AM GMT)

நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க மெட்ரோ ரெயில் பயணிகள் 'வாட்ஸ்-அப்' மூலம் டிக்கெட் பெறும் வசதிமெட்ரோ ரெயில் பயணிகள் 'வாட்ஸ்-அப்' மூலம் டிக்கெட் பெறும் வசதி

சென்னை

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய 'வாட்ஸ்-அப்' எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்காமல் டிக்கெட் பெறலாம் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு கியு.ஆர்.குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிப்பவர்களுக்கு 20 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சிலர் டோக்கன் மூலம் பயணிக்கின்றனர். தற்போது 'வாட்ஸ்-அப்' மூலம் டிக்கெட் பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மெட்ரோ ரெயிலில் செல்லும் பயணிகள் அலுவலக நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ரெயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. எளிதான முறையில், பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள 'வாட்ஸ்-அப்' மூலம் டிக்கெட் எடுக்கலாம். இதன் மூலம், பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் பதிவு செய்யலாம்.

எப்படி டிக்கெட் பெறுவது? எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ நிறுவனத்தின் பொதுவான செல்போன் எண் 83000-86000 என்ற எண்ணுக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் 'ஹாய்' என்று அனுப்ப வேண்டும். பின்னர், 'சார்ட் பாட்' என்ற தகவல் வரும்.

அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கும். பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரெயில் நிலையம், சேரும் ரெயில் நிலையம் ஆகியவற்றை பதிவு செய்து, 'வாட்ஸ்-அப்', மூலமோ அல்லது 'ஜி-பே' மூலமாகவோ பணம் செலுத்தினால் போதும். பயண டிக்கெட் 'வாட்ஸ்-அப்' எண்ணிற்கு வந்துவிடும்

இந்த டிக்கெட்டை ரெயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள க்யூ-ஆர் கோடு ஸ்கேனரில் காண்பிப்பதன் மூலம் மெட்ரோ ரெயில் பயணத்தை மேற்கொள்ள முடியும். பயணம் முடிந்து, சென்று சேர வேண்டிய இடம் வந்ததும், அங்குள்ள க்யூ-ஆர் கோடு ஸ்கேனரில் டிக்கெட்டை காண்பித்தால் வெளியே செல்ல முடியும்.

கடந்த மே மாதத்தை ஒப்பிடுகையில் கடந்த ஜூன் மாதம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 869 பயணிகள் அதாவது 74 லட்சத்து 6 ஆயிரத்து 876 பயணிகள் பயணித்து உள்ளனர் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story