106வது பிறந்தநாள்: அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஈபிஎஸ்
அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை,
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் வருகிற இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அதிமுக அலுவலகம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆரின் புகைப்படத்துக்கு மாலை எடப்பாடி பழனிசாமி அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் ,
ஏழை எளியோர் பசிதீர்த்த வள்ளல், இடஒதுக்கீட்டை 49% இருந்து 68% ஏற்றிய சமூகநீதி காவலர், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத
நம் புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் பிறந்தநாளில் அவர் புகழை போற்றி,தமிழகத்தில் தீயசக்திகளை வேரோடு ஒழித்து,கழக ஆட்சி மீண்டும் அமைப்பதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம்.
கலங்கரை விளக்கமாக இருந்து தமிழகத்தை கரை சேர்த்த காவியத் தலைவர், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், வாழ்வு தந்த வள்ளல், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும் பெருமையையும் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.