செங்கல்பட்டில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நில அதிர்வு


செங்கல்பட்டில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நில அதிர்வு
x
தினத்தந்தி 8 Dec 2023 2:50 AM GMT (Updated: 8 Dec 2023 3:17 AM GMT)

நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இன்று காலை 7.39 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் சுமார் 100 கி.மீ. சுற்றளவு வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story