சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம், டிச.19-
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் சர்வதேச சிறுபான்மையினர் உரிமை தினத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைவர் முகமது ஹலீம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஜின்னா, நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மாவட்ட குழு ஜோசப், நகர மன்ற உறுப்பினர் தஸ்லீமா ஆகியோர் முன்னில வகித்தனர். மாநில துணைத் தலைவர் மூசா, மனித உரிமை மாநில அமைப்பாளர் ரமேஷ் பாபு ஆகியோர் கண்டன உரையாற்றினர். 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதை ரத்து செய்யக்கூடாது, சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ராஜா, மாவட்ட துணைத் தலைவர்கள் ஜாகிர் உசேன், பிரகாஷ், மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.