'மிக்ஜம்' புயல் எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட வாய்ப்பு - தெற்கு ரெயில்வே தகவல்


மிக்ஜம் புயல் எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரெயில்  சேவை பாதிக்கப்பட வாய்ப்பு - தெற்கு ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2023 11:21 PM IST (Updated: 3 Dec 2023 5:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் வரும் 4-ம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புயல் நேரத்தில் சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே கூறியுள்ளதாவது, 'மிக்ஜம்' புயல் காரணமாக இதுவரை இல்லாத அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மின்சார ரெயில் சேவைகள் பாதிக்கப்படலாம். தற்போதைய நிலவரப்படி எந்த வித ரெயில்களும் ரத்து செய்யப்படவில்லை. எனவே பயணிகள் தெற்கு ரெயில்வேயின் செய்தி அறிவிப்புகள் மற்றும் சமூக ஊடக அறிவிப்புகள் ஆகியவற்றைப் பின்பற்றி, அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று கூறியுள்ளது.

1 More update

Next Story