முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் மு.க. அழகிரி சந்திப்பு


முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் மு.க. அழகிரி சந்திப்பு
x

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

திமுக துணைப்பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அமைச்சருமான பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு, குற்றவாளிகள் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதேவேளை, இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டபோதும் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வழக்கு தொடர்பான மேல்முறையீடு உள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியை முன்னாள் எம்.பி. மு.க.அழகிரி இன்று சந்தித்தார். பொன்முடி வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை, மு.க. அழகிரி சந்தித்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story