கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; 2 பேர் பலி - டிரைவர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; 2 பேர் பலி - டிரைவர் கைது
x

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியில் உள்ள செட்டித்தெருவை சேர்ந்த சண்முகம் செட்டியார் (வயது 64). எண்ணெய் வியாபாரி. இவருக்கு திருமணமாகி ரவணா (52) என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் எம்.எஸ்.ஆர். கார்டனில் சண்முகம் செட்டியார் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு வீட்டு வேலைக்கான கட்டிட பணிகளை பார்வையிட்ட பிறகு, சண்முகம் செட்டியார் ஆரணியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அவருடன் ஆரணி அடுத்த போந்தவாக்கத்தை சேர்ந்த கட்டிட பெண் தொழிலாளி பாக்கியம் (45) என்பவரும் உடன் அமர்ந்து சென்றார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் கொல்கத்தாவில் இருந்து கேரளா நோக்கி சென்ற சரக்கு லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. இதில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சண்முகம் செட்டியார் மற்றும் பெண் கட்டிட தொழிலாளி பாக்கியம் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யனாரப்பன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப் காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான திருச்சி அடுத்த துறையூரை சேர்ந்த லாரி டிரைவர் செல்வகுமார் (48) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story