வேல் யாத்திரை 4 எம்.எல்.ஏ.,க்களை கொடுத்தது, என் மண் என் மக்கள் 40 எம்.பி.,க்களை கொடுக்கும் -அண்ணாமலை


வேல் யாத்திரை 4 எம்.எல்.ஏ.,க்களை கொடுத்தது, என் மண் என் மக்கள் 40 எம்.பி.,க்களை கொடுக்கும் -அண்ணாமலை
x

பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் மக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தர வேண்டும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருப்பூர்,

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நிறைவு யாத்திரையை திருப்பூரில் தொடங்கினார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது தெரிந்தே வாக்களிக்கும் மக்களவைத் தேர்தல் இது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் கூட்டம் எனவே மக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தர வேண்டும்.

'வேல் யாத்திரை' பா.ஜ.க.,வுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்ததுபோல 'என் மண் என் மக்கள்' யாத்திரை 40 பாராளுமன்ற உறுப்பினர்களை கொடுக்க போகிறது என்றார்.


Next Story