மதுரையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்


மதுரையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
x

மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை


காவிரி நதிநீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழர்களின் உரிமையை தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புதூர் பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தலைமை தாங்கினார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் தொடர்ச்சியாக தமிழகத்துக்கான உரிமைகளில் மத்திய அரசு பாகுபாடு காட்டி வருவதை சுட்டிக்காட்டியும் பேசப்பட்டது. அத்துடன் நதி நீர் ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண் ஜெயசீலன், கிழக்கு மண்டல செயலாளர் அப்பாஸ், மேற்கு மண்ட செயலாளர் சிவானந்தம், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் சாராள், பாண்டியம்மாள், என்ஜினீயர் அன்பரசி, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சாகின் பாத்திமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story