நாமக்கல்: தக்காளி வாங்க சென்ற பெண்ணின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு..!


நாமக்கல்: தக்காளி வாங்க சென்ற பெண்ணின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு..!
x

நாமக்கல்லில் பட்டப்பகலில் பெண்ணிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல்லை அடுத்த சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் நல்லதம்பி. இவரது மனைவி பாக்கியலெட்சுமி (40). இவர் முதலைப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் தக்காளி விற்பனை செய்ததை பார்த்த பாக்கியலெட்சுமி, தக்காளி வாங்க இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனத்தின் சீட்டின் பின்புறம் வைத்திருந்த பர்ஸை எடுத்து தக்காளி வாங்க சென்றார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது வாகனத்தில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாக்கியலெட்சுமி திருடன்... திருடன்... என சத்தம் போட்டு உள்ளார். ஆனால் பணத்தை எடுத்த மர்ம நபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் பாக்கியலட்சுமி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

நாமக்கல்லில் பட்டப்பகலில் பெண்ணிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story