அதிமுக-பாஜக கூட்டணி முறிவு தொடர்பாக தேசிய தலைமை பேசும்: அண்ணாமலை பேட்டி


அதிமுக-பாஜக கூட்டணி முறிவு தொடர்பாக தேசிய தலைமை பேசும்: அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 25 Sep 2023 1:05 PM GMT (Updated: 25 Sep 2023 2:31 PM GMT)

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு தொடர்பாக தேசிய தலைமை பேசும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கோவையில் நடைபயணம் மேற்கொண்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது அண்ணாமலை பேசியதாவது;

"கோவையில் என் மண் என் மக்கள் யாத்திரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. யாத்திரையில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை. அதிமுகவின் அறிக்கையை படித்தோம். அதிமுக முடிவு குறித்து தற்போது எதுவும் பேச விரும்பவில்லை. இதுகுறித்து பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகிறேன்.

பாஜக ஒரு தேசிய கட்சி. அனைத்திற்கும் ஒரு நடைமுறை உள்ளது. தேசிய தலைவர்கள் உள்ளனர். அதிமுகவின் முடிவு தொடர்பாக தேசிய தலைமை பேசும்." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story