தேசிய லோக் அதாலத் - தமிழ்நாடு முழுவதும் 70,029 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய லோக் அதாலத் - தமிழ்நாடு முழுவதும் 70,029 வழக்குகளுக்கு தீர்வு
x

ஒரே நாளில் தேசிய லோக் அதாலத் மூதல் 437 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70,029 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கோர்ட் வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) நடைபெற்றது. இதில் மொத்தம் 437 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 ஆயிரத்து 29 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் 7 அமர்வுகளும், மதுரை ஐகோர்ட் கிளையில் 3 அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா சட்டப்பணிகள் ஆணைய குழுக்கள் சார்பில் 433 அமர்வுகளும் வழக்குகளை தீர்வுக்கு எடுத்துக் கொண்டன. இதில் 3,080 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 170 கோடியே 71 லட்சத்து 17 ஆயிரத்து 533 ரூபாய் இழப்பீடு வழங்கி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் 1,222 செக் மோசடி வழக்குகளில் 51 கோடியே 4 லட்சத்து 66 ஆயிரத்து 870 ரூபாய் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டுள்ளது. இது தவிர 68 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,073 வழக்குகளிலும், 4 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 51 தொழிலாளர் பிரச்சினை தொடர்பான வழக்குகளிலும் , 166 குடும்ப நல நீதிமன்ற வழக்குகளிலும் தீர்வுகள் காணப்பட்டுள்ளன.

தேசிய லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்ட 70 ஆயிரத்து 29 வழக்குகளில், 59 ஆயிரத்து 612 வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளவை என தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story