ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்


ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

விருதுநகர்


ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த நீதிமன்றத்தில் 2,292 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 154 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி திலகம் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து நீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொண்டனர்.

மொத்தம் ரூ.2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 650 நஷ்ட ஈடு வழங்க இந்த நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. மேலும் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விபத்தில் காயம் அடைந்த கடற்கரை என்பவருக்கு அதிகபட்ச தொகையாக ரூ. 18 லட்சம் நஷ்ட ஈடு தொகை வழங்கப்பட்டது. இந்த தொகையினை நீதிபதிகள் வழங்கினர்.Next Story