தேவதானப்பட்டி அருகேதொழிலாளி கொலையில் 10 பேர் மீது வழக்கு


தேவதானப்பட்டி அருகேதொழிலாளி கொலையில் 10 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே தொழிலாளி கொலையில் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் இருளப்பன் (வயது 34). கட்டிட தொழிலாளி. ஜெயமங்கலம் நால்ரோடு அருகே உள்ள சிந்துவம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (34). இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இருளப்பன், அந்த பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு சென்றார். அப்போது கார்த்திக் ராஜா மற்றும் சிலர் அதே பகுதியில் நின்று தகாத வார்த்தைகளால் பேசி கொண்டிருந்தனர். இதை அந்த வழியாக சென்ற இருளப்பன் தட்டி கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் ராஜா மற்றும் சிலர் இருளப்பனை கையால் தாக்கினர். அப்போது கார்த்திக் ராஜா, அருகில் அதே ஊரை சேர்ந்த முத்துராஜ் என்பவர் வைத்திருந்த கத்தியை எடுத்து இருளப்பனை சரமாரியாக குத்தினார். இதை தடுத்த செந்தில்குமாரையும் தாக்கினர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இருளப்பனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது சிந்துவம்பட்டி, காந்திநகர் காலனியை சேர்ந்தவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருளப்பன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிந்துவம்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா, முத்துராஜ், காமாட்சி, கோபி, பாலகிருஷ்ணன், பிரவீன் குமார், சாந்தகுமார், பாலா உள்பட 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story