நெல்லை வந்தே பாரத்: திண்டுக்கல், மதுரைக்கு 10 நிமிடம் முன்னதாகச் செல்லும்


நெல்லை வந்தே பாரத்: திண்டுக்கல், மதுரைக்கு 10 நிமிடம் முன்னதாகச் செல்லும்
x
தினத்தந்தி 1 Dec 2023 9:45 PM GMT (Updated: 1 Dec 2023 9:45 PM GMT)

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்துக்குள் செல்லும் வகையில் இயக்கப்படுகிறது.

சென்னை,

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்துக்குள் செல்லும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், திண்டுக்கல், மதுரை, விருதுநகா் ரயில் நிலையங்களுக்கு 10 நிமிஷங்கள் முன்னதாக செல்லும் வகையில் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் திண்டுக்கலுக்கு இரவு 7.56 மணிக்கு பதிலாக இரவு 7.46 மணிக்கும், மதுரைக்கு இரவு 8.40 மணிக்கு பதிலாக இரவு 8.30 மணிக்கும், விருதுநகருக்கு 9.13 மணிக்கு பதிலாக 9.03 மணிக்கும் செல்லும். மற்ற ரயில்நிலையங்களான தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலிக்கு வழக்கமான நேரத்தில் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கால அட்டவணை டிசம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.


Next Story