பட்டுக்கோட்டையில் ரூ.22¾ கோடி செலவில் புதிய பஸ்நிலையம், மார்க்கெட்


பட்டுக்கோட்டையில்  ரூ.22¾ கோடி செலவில் புதிய பஸ்நிலையம், மார்க்கெட்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:45 AM IST (Updated: 17 Dec 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் ரூ.22¾ கோடி செலவில் புதிய பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் ரூ.22¾ கோடி செலவில் புதிய பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது.

பஸ் நிலையம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து பல்வேறு ேதவைகளுக்காக பொதுமக்கள் பட்டுக்கோட்டை நகருக்கு வருகின்றனர். பட்டுக்கோட்டை நகரில் தற்போதுள்ள பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 450 பஸ்கள் வந்து செல்கின்றன.

ஆனால் பஸ்கள் வந்து செல்லவும், பயணிகள் காத்திருக்கவும் போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் பல ஆண்டுகளாக பொதுமக்களும், பயணிகளும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர்மன்ற தலைவர்களுக்கு புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அனுப்பி வந்தனர்.

இடம் தேர்வு

அதையடுத்து தற்போதைய நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகர்மன்ற கூட்டத்தில் பட்டுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம், புதிய மார்க்கெட் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி இருந்தார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், இடம் தேர்வு செய்யப்பட்டு பஸ் நிலையம், மார்க்கெட்டுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. அதையடுத்து பட்டுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் ரூ.20 கோடி செலவிலும், புதிய மார்க்கெட் ரூ.2 கோடியே 74 லட்சம் செலவிலும் அமைக்க தமிழகஅரசு அனுமதிஅளித்து உத்தரவிட்டுள்ளது.


Next Story