கிளாம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் இடையே மோதல்


கிளாம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் இடையே மோதல்
x
தினத்தந்தி 20 May 2022 5:49 AM GMT (Updated: 20 May 2022 7:02 AM GMT)

கிளாம்பாக்கம் அரசுமேல்நிலைப்பள்ளியின் நுழைவாயிலில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இப்பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி நுழைவாயில் பகுதியில் கும்பலாக நின்று கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சி சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுபற்றி கூடுவாஞ்சேரி போலீசார் நேற்று கிளாம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று வீடியோவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை எச்சரித்தனர்.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், மாணவர்கள் தினந்தோறும் பள்ளி நுழைவாயில் பகுதியில் சண்டை போட்டுக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒழுங்கீனமான முறையில் சீருடை அணிந்து வருகின்றனர். தலை முடியை சரிவரவெட்டுவது இல்லை, இதை ஆசிரியர்கள் கண்டித்தால் ஆசிரியர்களை தாக்குவது போல் முறைத்து நிற்கின்றனர். மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணித்து கண்டிக்க வேண்டும் அப்போது தான் தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினா ர்.


Next Story